செய்திகள்

கொவிட் தொற்று உறுதியாகி நோய் அறிகுறிகள் இல்லாதவர்களை வீட்டில் வைத்து கண்காணிக்க தீர்மானம்!

பீசீஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்ட போதும், எவ்வித நோய் அறிகுறியும் இல்லாதவர்களை அவர்களின் வீடுகளின் வைத்தே கண்காணிப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ பிள்ளே தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் வீடுகளில் இருக்கும் போது, அவர்களுக்கு நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் அவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கையெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரும் என்று அவர் கூறியுள்ளார்.

கொவிட் சிகிச்சை நிலையங்களில் நிலவும் இட நெருக்கடியை தீர்க்கும் வகையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
-(3)