செய்திகள்

பொலிஸ் காவலில் இருந்த கொஸ்கொட தாரக துப்பாக்கிச் சூட்டில் பலி!

பொலிஸ் காவலில் இருந்த பிரபல பாதாளக் குழு முக்கியஸதரான கொஸ்கொட தாரக என்றழைக்கப்படும் தாரக விஜேசேகர சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை அவர் ஆயுதம் தேடுவதற்காக மீரிகம பகுதிக்கு அழைத்துச் செல்லப்படும் போது, அந்தப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத்தின் மூலம் பொலிஸார் மீது சூட்டை நடத்தி தப்பிச் செல்ல முயன்ற போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் அவர் பலியானதாக கூறப்பபடுகின்றது.

இதேவேளை இந்த சம்பவத்தின் போது பொலிஸ் அதிகாரியொருவரும் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினத்தில் ஊறு ஜுவா என்றழைக்கப்படும் பாதாள கும்பல் உறுப்பினர் ஒருவரும் இதேபோன்று ஆயுதம் காட்டுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட போது பொலிஸாரின் சூட்டில் பலியானமையும் குறிப்பிடத்தக்கது.
-(3)