செய்திகள்

கோடிக்கணக்கான பெறுமதியுள்ள BMW I – 8 காரை அஜித் வாங்கினாரா?

நடிகர் அஜித், 3 கோடி ரூபாய் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ ஐ8 ஸ்போர்ட்ஸ் காரை வாங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் இன்று ஒரு செய்தி பரவியது. அந்த வண்டியை வடபழனி ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக கொண்டுவந்தபோது எடுத்த படங்கள் என வெள்ளைநிற பிஎம்டபிள்யூ ஐ8 காரின் படங்களும் இணையம் முழுக்க வலம் வந்தன.

கார் ரேஸில் பிரியம் கொண்ட அஜித் எப்பேர்ப்பட்ட உயர்ரக ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார் என அஜித் ரசிகர்கள் பரவசப்பட்டுப் போனார்கள்.

ஆனால், அஜித், பிஎம்டபிள்யூ கார் வாங்கியுள்ளார் என்கிற செய்தி தவறு. தேவையில்லாத செய்திகளைப் பரப்பவேண்டாம் என்று அஜித் தரப்பிலிருந்து தகவல் வந்துள்ளது.