செய்திகள்

கோட்டாவின் மேடையில் தொப்பியை மாற்றிய இராஜங்க அமைச்சர்

வெளிநாட்டு அலுவல்கள் இராஜங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்‌ஷவிற்கு ஆதரவு தெரிவித்து அவரின் மேடையில் ஏறியுள்ளார்.
பொலனறுவையில் தற்போது நடத்தப்படும் கோதாபய ராஜபக்‌ஷவின் கூட்ட மேடையில் ஏறியுள்ள அவர் தான் கோதாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.
அதன்போது பச்சை நிற தொப்பியுடன் மேடைக்கு ஏறிய அவர் அந்த தொப்பியை கழற்றிவிட்டு பொதுஜன பெரமுனவின் தொப்பியை அணிந்துகொண்டார். -(3)