செய்திகள்

கோண்டாவிலில் இளைஞர்கள் முன்னெடுத்த பார்த்தீனிய ஒழிப்புச் செயற்பாடு

நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் வடமேற்;குக் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பார்த்தீனியத்தின் பரம்பல் அதிகரித்துள்ள நிலையில் அதனை ஒழிக்கும் செயற்பாடுகள் பிரதேச இளைஞர்களின் ஒத்துழைப்புடன் அண்மையில் முன்னெடுக்கப்பட்டன.

கோண்டாவில் வடமேற்குக் கிராம சேவையாளர் பா.கபிலன் தலைமையில் நடைபெற்ற இந்த முன்மாதிரியான செயற்பாட்டில் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் தேவிகபாலன் மற்றும் பிரதேச இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

குறித்த பகுதி அதிகமான தோட்டக் காணிகளை உள்ளடக்கிய பிரதேசமாகக் காணப்படுகின்ற நிலையில் இந்தப் பார்த்தீனிய ஒழிப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமை குறித்து விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.பொதுமக்களும் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். யாழ்.நகர் நிருபர்-

Paathiniyam  (1) Paathiniyam  (2)