செய்திகள்

கோதபாயவின் உயிருக்கு இப்போது எந்த ஆபத்தும் இல்லை என்கிறது அரசு

முன்னாள் பாதுகாப்பு செயலளார் கோதபாய ராஜபக்ஸவுக்கு எந்த உயர் ஆபத்தும் இப்பொது இல்லை என்றும் அவருக்கான பாதுகாப்புக்கு அரசாங்கம் பொறுப்பு என்றும் அமைச்சர் ஜயந்த கருணாதிலக்க பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

அவர்க்கு 8 இராணுவ அதிகாரிகளும் 50 இராணுவ வீரர்களும் பாதுகாப்பு வழங்குவதாகவும் அவர் கூறினார்.