செய்திகள்

கோதபாய கைதாவதை தடுத்த ரணில்

மிதக்கும் ஆயுதக்கப்பல் விவகாரம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஸ கைது செய்யப்படுவதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தடுத்து விட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இந்த ஆயுதக்கப்பல் தொடர்பில் சட்ட திட்டங்களை கோதபாய மீறியுள்ளமையினால் அவரையும் மேலும் மூவரையும் கைது செய்வது பற்றி சட்ட மா அதிபர் ரணில் விக்கிரமசிங்கவுடன் உரையாடியபோது அவ்வாறு செய்வது தனது அரசாங்கத்துக்கு சிக்கல்களை உருவாக்கும் என்பதால் அவர்களை கைதுசெய்ய வேண்டாம் என்று கூறிய ரணில் விக்கிரமசிங்க, ஆனால் ஏனைய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதாகவும் தெரியவருகிறது.

இதன்பிரகாரமே, அவர் நாட்டியோ விட்டு வெளியேறாது கோதபாய மற்றும் ஓய்வுபெற்ற கடற்படை மேஜர் ஜெனரல் எக்கொடவல, ரக்னா லங்கா மற்றும் மஞ்சுளா யாப்பா நிறுவனத் தலைவர் மற்றும் அவன்ட் கிரட் நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் ஆகியோரது கடவுச் சீட்டுக்களை பறிமுதல் செய்வதற்கு காலி மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.