செய்திகள்

கோதபாய – சண்டே லீடர் வழக்கில் இணக்கப்பாடு

சண்டே லீடர் பத்தரிகைக்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்சவுக்கும் இடையிலான வழக்கில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கிறது.

கட்டுரையொன்று தொடர்பான வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு 2008 இல் ஆரம்பமாகியிருந்தது. கோதபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் பாதுகாப்பு அமைச்சினால் கொள்வனவு செய்யப்பட்டிருந்த எம்.ஜ.ஜி.விமானக் கொள்வனவு தொடர்பான கட்டுரை பிரசுரிக்கப்பட்டதையடுத்து இந்த வழக்கு ஆரம்பமாகியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.