செய்திகள்

கோதாவை கைதுசெய்ய உச்ச நீதிமன்று இடைக்கால தடை

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தான் கைதுசெய்யப்படுவதற்கு தடை விதிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோதபாய ராஜபக்ஸ தாக்கல் செய்திருந்த மனுவை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் அவர் கைது செய்யப்படுவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

இவர் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமைகள் மனு மீதான இறுதி தீர்மானம் எடுக்கப்படும் வரை பொலிசார் அவரை கைது செய்யமுடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதேவளை, இந்த மனுவை விசாரணை செய்யவிருந்த நீதிபதிகளில் ஒருவரான புவனேக அலுவிகார தான் இந்த விசாரணைகளில் இருந்து ஒதுங்கிக்கொள்வதாக ஏற்கனவே இன்று காலை அறிவித்திருந்தார்.