செய்திகள்

கோவிட் 19 இனை உலகில் இல்லாது செய்தல்

மருத்துவர் சி.யமுனாநந்தா

இன்று உலகெங்கும் பரவித் தாக்கத்தை ஏற்படுத்தும் கோவிட் 19 வைரஸினை உலகில் இல்லாது செய்ய மேற்கொள்ள வேண்டிய முற்காப்பு நடவடிக்கைகள் பற்றிச் சிந்திப்பது அவசியம்.; இலங்கை போன்ற நாடுகளில் நோய் கட்டுப்பாட்டில் உள்ளமையால் புதிதாகக் கண்டறியப்படும் நோயாளர்களில் இருந்து வைரஸ் கிருமி ஏனைய மனிதர்களிற்கும் இளஞ்சூட்டுக் குருதியுடைய முள்ளந் தண்டுள்ள விலங்குகளிற்கும் பரவுவதைத் தடுத்தல் வேண்டும். மருத்துவ ஆய்வு கூடங்களில் இருந்து தவறுதலாக கோவிட் 19 வைரஸ் மாதிரிகள் நீண்ட நாட்களுக்குப் பாதுகாக்கப்படல் தவிர்க்கப்படல் வேண்டும். கோவிட் 19 நோயாளிகள் பராமரிக்கப்படும் வைத்தியசாலைச் சுற்றாடல் மிகவும் சுத்தமானதாகவும்; அவ் வைத்தியசாலைச் சூழலில் நோய்க் கிருமிகளை தவறுதலாகப் பரப்பும் ஏதுக்கள் இல்லாத நிலையும் பேணப்படல் வேண்டும்.

கோவிட் 19 வைரஸ் உயிரியல் போர் ஆயுதங்களில் மிகவும் ஆபத்தான நிலை ஒன்றுக்கு (Group A) உரிய கிருமிகள் ஆகும்.. எனவே கோவிட் 19 வைரஸ் மாதிரிகள் ஆய்வு கூடங்களில் இருந்து தவறானவர்களின் கைகளிற்குச் செல்லல் தடுக்கப்படல் வேண்டும். கோவிட் 19 பரிசோதனை ஆய்வு கூடங்கள் பாதுகாக்கப்படல் வேண்டும். அன்றேல் மண்ணில் புதைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடிகள் எவ்வாறு பல தசாப்தங்களுக்கு சமூகத்திற்கு அச்சுறுத்தலாக அமைகின்றதோ அவ்வாறே கோவிட் வைரசும் மனித குலத்திற்கு பல தசாப்தங்களிற்கு அச்சுறுத்தலாக அமையும்.