செய்திகள்

கோவிட் – 19 தொற்று காலத்தில் கை கழுவுதல் பற்றிய விழிப்புணர்வு தினம் – ஒக்டோர் 15

சர்வதேச ரீதியாக கை கழுவுதல் பற்றிய விழ்ப்புணர்வு தினம் ஒக்டோபர் மாதம் 15 ம் திகதி பிரகனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வருடம் 2020ம் ஆண்டிற்குரிய தொனிப்பொருள் யாதெனில் 1010எல்லோரும் கை சுத்தம் பேணுவோம்__ என்பதாகும். அதாவது கைகளை சவர்க்காரம் பாவித்து கழுவுவதை எல்லா நாடுகளும் தமது பொதுவான கலாச்சாரமாக மதித்து விழ்ப்புணர்வை அதிகரித்தல் வேண்டும் என்பதாகும்.

இன்றைய கோவிட் – 19 (கொரோனா வைரஸ்) தொற்றுக் காலப்பகுதியில் கை கழுவுவதன் முக்கியத்துவம் பற்றி அறிந்திருக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். ஒருவரியில் சொல்வதாயின், சவர்க்காரமிட்டு கை கழுவுவதால் கொரோனா வைரசில் காணப்படும் மேலுறை அழிக்கப்படுவதால் அவ்வைரஸானது செயலிழக்கப்படுகிறது. ஒரு ஆய்வின்படி, கிட்டத்தட்ட 36% ஆன கோவிட் – 19 தொற்றுப்பரவல் கை கழுவுவதால் குறைக்கப்படுகிறது. இதற்கு இரு விடயங்கள் அவசியமாகிறது. ஒன்று கை கழுவுவதற்கான வசதி (சவர்க்காரம்/திரவ சவர்க்காரம்/அற்ககோல்/நீர் வசதி), மற்றையது மனப்பாங்கு (கை கழுவுதல் பற்றிய விழ்ப்புணர்வை அறிந்திருத்தல்).

கோவிட் – 19 காலப்பகுpதியல் உலக சுகாராத ஸ்தாபனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் 54 வருமானம் குறைந்த மற்றும் மத்திய நாடுகளில் 35% ஆன சுகாதார சேவைப்பிரிவுகளில் கை கழுவுவதற்கான தண்ணீர் மற்றும் சவர்க்கார வசதி இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் உலகில் 57% ஆன பாடசாலைகளே மாணவர்களிற்கு தேவையான கை கழுவும் வசதியை வழங்கியுள்ளதாம். கை கழுவுவதன் நன்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட சில ஆய்வுகளை எமது பிள்ளைகளுக்கு பகருதல் அவர்களின் சிந்தனை மற்றும் பழக்கவழக்கத்தில் நேரான மாற்றத்தைக் கொடுக்கும். அதாவது, மலசலகூடத்திற்கும் கை கழுவும் இடத்திற்கும் இடையிலுள்ள பாதையில் பாத அடையாளங்களை நிறப்’ச்சு மூலம் போக வேண்டிய திசை வழியே அடையாளப்படுத்தி விடலாம். மேலும் இன்றைய கோவிட் – 19 நோய் தொற்றுக்காலத்தில் வீட்டிற்கு வெளியில் சென்று திரும்புவோருக்கு கைகழுவுவதன் முக்கியத்துவம் பற்றி அடிக்கடி விழிப்புணர்வையும், நேரான பழக்கவழக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக வீட்டு நுழைவாசலிற்கும் கை கழுவும் இடத்திற்கும் இடையிலுள்ள பாதையில் போக வேண்டிய திசை வழியே பாத அடையாளங்களை நிறப்பூச்சு மூலம் வரைந்து விடலாம்.

அடுத்து, கை கழுவும் முறையின் வகைகள், எவ்வாறு கை கழுவ வேண்டும், கை கழுவுவதற்கு செலவழிக்க வேண்டிய நேரம் என்பன பற்றி ஆராய வேண்டும். பொதுவாக கை கழுவவேண்டிய சந்தர்ப்பங்கள் 3 வகையாக பிரிக்கலாம். முதலாவது, சவர்க்காரத்தைப் பாவித்து சமூக அல்லது வழக்கமான கை கழுவும் முறை, இரண்டாவது தொற்று நீக்கிகளைப் பாவித்து கை கழுவும்முறை, மூன்றாவது சத்திரசிகிச்சைகளின் போது கைகழுவும் முறை.

இன்றைய கோவிட் – 19 காலப்பகுதியில், நாம் ஆறு தடவைகள் தொடக்கம் பத்து தடவைகள் பரிந்துரைக்கப்பட்டபடி கை கழுவ வேண்டும் என்பதை ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன. எப்படிமுறைகளுக்கூடாக கை கழுவ வேண்டும் என்பதை கீழுள்ள விபரணப்படம் விளக்குகிறது. இவற்றை ஏழு படிகளில் சொல்வதாயின்,

1. கைகளை நனைத்தபின் நுரைக்குமளவிற்கு சவர்க்காரமிடல்.
2. உள்ளங்கைகளை ஒன்றாக தேய்த்தல்.
3. வெளிப்புற கைகளை தேய்த்தல்.
4. விரல்களை கோர்த்து தேய்த்தல்.
5. விரல்களின் வெளிப்புறங்களை தேய்த்தல்.
6. பெருவிரல்களை சுத்தம் செய்தல்.
7. விரல் நுனிகளை உள்ளங்கைகளில் தேய்த்தல்.

Hand washing Tamil -1

இப்படிமுறைகளின் ஊடாக, கைகளில் அழுக்குப் படிந்திருப்பது கண்களிற்கு தெரியவில்லையாயின், 20 – 30 செக்கன்களிற்கும், கைகளில் அழுக்குகளட படிந்திருப்பது அவதானிக்கப்படின் 40 – 60 செக்கன்களிற்கும் சவர்க்காரம் இட்டு நன்றாக கழுவ வேண்டும். பொதுவாக 20 செக்கனிகளிற்கு ++Happy birthday to you++  நான்கு வரிப் பாடலை எளிமையாக பாடி முடியும்போது சவர்க்காரமிட்டு தேய்ப்பதையும் நிறைவு செய்து கொள்ளலாம்.

இன்றைய கோவிட் – 19 நோய் காலப்பகுதியில், மாணவர்கள், மருத்துவ துறையினர், அலுவலக மற்றும் வெளிக்கள பணியாளர்கள், வீட்டிலுள்ளோர் என எல்லா தரப்பினரும் தாம் முடிந்தளவு சந்தர்ப்பங்களில் கை கழுவ வேண்டும் என்பதை அறிந்து அதன்படி செயற்பட வேண்டும். வெளியிடங்களிலுள்ள கதவு பிடிகள், உபகரணங்கள், இதர தளபாடங்கள், கடனட்டைகள், பண தாள்/சில்லறைகள், போக்குவரத்து சாதனங்கள் போன்றன தும்மல் மற்றும் இருமலின் போது கைகளை பாவித்த பின், எமது கண், மூக்கு மற்றும் வாயைத் தொட முன்னர், உணவு தயாரிக்க முன்னர், உணவருந்த முன்னர், விளையாட்டின் பின்னர்ஈ மலசலகூட பாவனையின் பின்னர், வாந்தி மற்றும் வாந்திபேதி மற்றும் உடல் காயங்களுடன் கூடிய நோயாளியைப் பாராமரிக்க முன் மற்றும் பின்னர், விலங்குகளை தொட்ட பின்னர், குப்பைத் தொட்டியை தொட்ட பின்னர் என பல தரப்பட்ட சந்தர்ப்பங்களில் பல தரப்பட்ட மனிதர்களும் தேவையான சந்தர்ப்பங்களில் கை கழுவும் முறையைப் பின்பற்ற வேண்டும்.

அவசர தேவைகளுக்குப் பாவிக்கும் Hand sanitizer ஐ இலகுவாக வீட்டிலும் தயாரிக்கலாம். 2/3 கப் அற்ககோலையும், 1/3 கப் கற்றாளை சோறையும் தேவைப்படின் 5 – 10 துளி எண்ணெயினையும் கலந்து தயாரித்து விடலாம். எது எவ்வாறாயினும் கை கழுவுவதற்கு செலவழிக்கும் நேரம், கைகளை தேய்த்துக் கழுவும் பொறிமுறை, ஓடும் தண்ணீர் வசதி மற்றும் கைகளை உலர விடல் போன்றவற்றை கவனத்திற் கொள்ள வேண்டும்.

ஆகவே, கோவிட் – 19 நோய்த் தொற்று காலப்பகுதியில் கைகழுவுதலின் அவசியம் உணர்ந்து உரிய முறைப்படி கைகழுவுவதன் மூலம் எம்மையும் பாதுகாத்து எமக்கு அருகிலுள்ளவர்களையும், நோய் தொற்றாமல் பாதுகாத்துக் கொள்வோம்.

“முறையாக கழுவினால் உங்கள் கைகள் தூய்மையாக மாறும்”

ச. சஸ்ரூபி, Dr.  இ. சுரேந்திரகுமரன், Dr. PA.  டினேஷ் கூஞ்சே