செய்திகள்

கௌதம் மேனனின் அடுத்த படத்தில் அருண்விஜய் ஹீரோ

அருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை கௌதம் மேனன் இயக்க இருக்கிறார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த படம் ‘என்னை அறிந்தால்’. சமீபத்தில் வெளியான இப்படம் வசூலை அள்ளியது.

அருண் விஜய் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்தார். அருண் விஜய் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், கௌதம் மேனன் இயக்கும் ஒரு படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

சிவஞானம் இயக்கத்தில் அருண் விஜய், கார்த்திகா நடிப்பில் ‘வா’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கௌதம் மேனன் கலந்துகொண்டு பேசினார்.

”அருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் படத்தை விரைவில் இயக்க இருக்கிறேன் ” என்று கௌதம் மேனன் அறிவித்துள்ளார்.

தற்போது கௌதம் மேனன் சிம்பு, பல்லவி சுபாஷ் நடிக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை இயக்கிவருகிறார். இப்படம் முடிந்த பிறகு அருண் விஜய்யை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.