செய்திகள்

சகோதரருடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு குடும்பத்தில் புயலை கிளப்பிய குஷ்பு

ஜப்பான் நாட்டில் சகோதரர் மற்றும் குழந்தைகளுடன் விடுமுறையை கொண்டாடி வரும் குஷ்பு, அவ்வப்போது தனது டுவிட்டரில் சுற்றுப்பயண நிகழ்வுகளை படம் பிடித்து பதிவேற்றம் செய்து வருகிறார்.

அந்த வகையில் நேற்று முன்தினம் சிறுவர்கள் அணியும் தொப்பியை அணிந்துக் கொண்டு குழந்தைகளுடன் செல்பி எடுத்து அதை டுவிட்டரில் பதிவேற்றம் செய்திருந்தார்.

இந்நிலையில் ஒசாகாவில் உள்ள பிரம்மாண்ட ஜெயன்ட் வீல் முன்பு எடுத்த புகைப்படத்தை குஷ்பு நேற்று பதிவேற்றம் செய்துள்ளார். அதில் குழந்தைகளுக்கு நடுவே உள்ள தனது போட்டோவின் மத்தியில், தூரத்தில் தனது சகோதரர் அப்துல்லாவும் நின்றிருப்பதாக குஷ்பு டுவிட் செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தால் தங்கள் குடும்பத்தில் குண்டு வீசியிருப்பதாகவும் குஷ்பு நகைச்சுவையாக கூறியுள்ளார். மற்றொரு டுவிட்டரில் முகம் தெரியாத ஊரில் சாலையோர உணவகங்களில் உணவருந்துவது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.