செய்திகள்

சங்ககாரவின் 11வது இரட்டை சதத்தால் வலுவான நிலையில் இலங்கை அணி

குமார் சங்ககாரவின் 11வது அற்புதமான இரட்டைசதம் காரணமாக நியுசிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டபோட்டியின் இரண்டாவது நாள் முடிவில் இலங்கை அணி வலுவான நிலையிலுள்ளது.
ஐந்து விக்கெட்களை இழந்து 78 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்த அபாயகரமான நிலையில் தனது துடுப்பாட்டத்தை தொடர்ந்து இலங்கை அணி சங்ககார மற்றும் தினேஸ் சந்திமலின் சிறப்பான ஆட்டம் காரணமாக முதல் இனிங்சில் சகல விக்கெட்களையும் இழந்து 356 ஓட்டங்களை பெற்றுள்ளது.
சங்ககார சந்திமல் ஜோடி ஆறாவது விக்கெட்டிற்கான இணைப்பாட்டமாக 138 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.சந்திமல் 67 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் பின்வரிசை ஆட்டக்காரர்களுடன் இணைந்து இலங்கை அணி நியுசிலாந்தை விட 135 ஓட்டங்கள் அதிகமாக பெற உதவிய சங்ககார தனது 11 இரட்டை சதத்தினையும் பூர்;த்தி செய்தார்.
குமார் சங்ககார 316 பந்துகளில் 3 சிக்சர்கள் அடங்கலாக 203 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் ஆட்ட முடிவில் நியுசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 21 ஓட்டங்களை பெற்றுள்ளது.