செய்திகள்

சங்கரே பார்த்து மிரண்ட லாரன்ஸின் காஞ்சனா கெட் அப்

ஐ படத்துக்குப் பிறகு இயக்குனர் ஷங்கர் தனது அடுத்தப் படத்தை இயக்கத் தயாராகிவிட்டார்.

இந்தப் படத்தில் ரஜினி நடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஷங்கர் ஏற்கனவே ரஜினியை வைத்து ‘எந்திரன்’, ‘சிவாஜி’ படங்களை எடுத்தார். அடுத்து எந்திரன் 2ம் பாகத்தை எடுக்கப் போகிறார் என்று கூறப்பட்டது. தற்போது அதை ஒத்தி வைத்துவிட்டு ரஜினி, விக்ரம் இணைந்து நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறாராம்.

விரைவில் படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இதனிடையே இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் ராகாவா லாரன்ஸ் இயக்கி, நடித்து வெளியான காஞ்சனா 2 படத்தை பார்த்து பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘முனி படம் பார்த்தேன். கோவை சரளாவின் காமெடி ஃபெர்மான்ஸை மிகவும் ரசித்துப் பார்த்தேன். பல திறமைகளைக் கொண்ட ராகவா லாரன்ஸின் நடிப்பு அபாரம். குறிப்பாக பாடல் ஒன்றில் வரும் சின்னப் பெண் கெட்அப்பில் அசத்தியிருக்கிறார்’’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட நாட்களாக ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ரிலீஸாகும் படங்களைப் பற்றி கருத்து ஏதும் வெளியிடாமல் இருந்து வந்த இயக்குனர் ஷங்கர் தற்போது காஞ்சனா-2 படம் குறித்து கருத்து வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.