செய்திகள்

சஜின் டி வாஸ் குணவர்த்தன கைது: மே 20 வரை விளக்கமறியல்

பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்த்தன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். மே 20 வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவண் குணசேகர தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்த்தன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இன்று முற்பகல் அழைக்கப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட சஜின் டி வாஸ் குணவர்தன கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று மாலை ஆஜர்படுத்தப்பட்டார். இதன் போது மே 20 வரை விளக்கமறியலில் அவரை வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.