செய்திகள்

சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா கனடாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமனம்: இலங்கையில் இருக்கவே விரும்புகிறார் அவர்

சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா கனடாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால் இவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தன்னை கனடாவின் உயர்ஸ்தானிகராக நியமித்தமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும், எனினும் இந்நாட்டில் தங்கியிருந்து தொடர்ந்தும் பொது மக்களுக்கு சேவை புரிய தான் விருப்புவதாகவும் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்தார்.
-(3)