செய்திகள்

சட்டவிரோத புகலிடக்கோரிக்கையாளர்கள் விடயத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கம் நியாயமாக செயற்பட்டதாக தீர்ப்பு

அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற முயன்ற 157 இலங்கையாகள் தொடர்பாக அந்த நாட்டு அரசாங்கம் சட்டபூர்வமான விதத்தில் நடந்துகொண்டதாக உயர்நீதிமன்றம் தீhப்பளித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் சுங்கத்திணைக்கள கப்பலில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கையர்களில் ஓருவர்,தான் பிழையான விதத்தில் சிறைவைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்து தாக்கல்செய்த வழக்கிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
4-3 என்ற அடிப்படையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளனர்.குறிப்பிட்ட வழக்கில் வெற்றிபெற்றிருந்தால் இந்தோனேசியாவிலிருந்து வரும் படகுகளை திருப்பியனுப்பும் அவுஸ்திரேலியாவின் கொள்கைக்கு முடிவுகட்டியிருக்கலாம் என்ற நம்பிக்கைகள் இலங்கை தமிழர்கள் சார்பாக வாதடிய சட்டத்தரணிகள் மத்தியில் காணப்பட்ட நிலையிலேயே இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.