செய்திகள்

சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக அறிவிக்கவும்

தமிழ் , சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் நாட்டில் மதுபான நிலையங்கள் மூடப்படுள்ள நிலையில் சட்ட விரோதமான வகையில் மது விற்பனையில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் தொடர்பாக தமக்கு தகவல் வழங்குமாறு மது வரி திணைக்களம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இதன்படி 0112300170 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் தருமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை பல இடங்களில் விசேட சோதனை நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.