செய்திகள்

சதித்திட்டத்துக்காக 2000 இராணுவத்தினரை கொழும்புக்குள் தயாராக மஹிந்த வைத்திருந்தார்: சரத் பொன்சேகா

சதித்திட்டம் ஒன்றை மேற்கொள்ளும் பொருட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ சுமார் 2000 இராணுவத்தினரை தேர்தலுக்கு மூன்று தினங்களுக்கு முன்னர் கொழும்புக்குள் நகர்த்தியிருந்ததாக சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார்.

வடக்கு கட்டளையகத்தில் இருந்து வருவிக்கப்பட்ட இந்த இராணுவத்தினர் இரு பிரிவுகளாக கொழும்பில் நிலைகொள்ள வைக்கப்பட்டதாகவும் ஒருபிரிவு அலரிமாளிகைக்கு அருகிலும் மற்றைய பிரிவு தேர்தல் திணைக்களத்தினை குறிவைத்து நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் இந்தியாவின் என்.டி.டி.வி தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்தியேக செவ்வியில் அவர் தெரிவித்திருக்கிறார்.