செய்திகள்

சமல் ராஜபக்‌ஷவை பிரதமர் வேட்பாளராக களமிறக்குமாறு ஶ்ரீ.ல.சு.கூவில் யோசனை

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாராக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷவை களமிறக்குமாறும் கட்சியிலிருந்து யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள அந்த கட்சியின் விசேட குழுவே இந்த யோசனையை முன்வைத்துள்ளது.

இது தொடர்பாக நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றியுள்ள அந்த குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான சரத் அமுனுகம தெரிவித்துள்ளதாவது,

கட்சியின் சகரையும் ஒரே இடத்துக்கு கொண்டு வர யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு யோசனைதான் சமல்ராஜபக்‌ஷவை பிரதமர் வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்பது. ஆனால் இது யோசனை மட்டுமே ஒழிய தீர்மானமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.