செய்திகள்

சமிந்தவாஸ் பதவி விலகினார்

தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய சமிந்தவாஸ் தனது பதவியிலிருந்து விலகவதாக அறிவித்துள்ளார்.
ஆவரின் பதவி விலகல் கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை  தெரிவித்துள்ளது. அவரின் ஒப்பந்த காலம் முடிந்த நிலையிலேயே அவர் பதவி விலகியுள்ளதாக கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. ஆனால் தான் அழுத்தங்கள் காரணமாகவே பதவி விலக தீர்மானித்தாக சமிந்தவாஸ் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இவர் 2013 பெப்ரவரி மாதத்தில் அவர் குறித்த பதவியில் இணைந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.