செய்திகள்

சமூக செயற்பாட்டாளர் இந்ரானி ஈரியகோல்ல காலமானார்

பிரபல சமூ‍க செயற்பாட்டாளர் இந்ரானி ஈரியகோல்ல, சுகவீனமுற்றிருந்த நிலையில் இன்று காலை காலமானார்.

இவருக்கு வயது 82. மேலும் இவர் முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் அமரர் காமினி ஈரியகோல்லவின் மனைவியாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை மாலை பொரளை கனத்தை மயானத்தில் இடம்பெறும்.