செய்திகள்

சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் வாக்குரிமை

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவிற்கு வாக்குரிமையை வழங்க தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சரத் பொன்சேக்காவிற்கு முழுமையான பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமையினால் அவருக்கு வாக்குரிமை மீள அளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் கூறினார்.