செய்திகள்

சர்வதேச ஆதரவை வலுப்படுத்தும் வகையில் கூட்டமைப்பின் விஞ்ஞாபனம்: மாவை

சர்வதேசத்தின் ஆதரவை மேலும் வலுப்படுத்தி புலம் பெயர்ந்த தமிழர்களின் ஒன்றுபட்ட ஆதரவை பெற்றுக்கொள்ள கூடிய வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப் படுமென தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ். மார்ட்டீன் வீதியில் உள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற ஊடக வியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறிய தாவது,

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கான ஆயத்தங்களையும் செய்து வருகின்றது. இலங்கை என்ற ஐக்கிய நாட்டுக்குள் தமிழர்கள் தங்களை தாங்களே ஆள கூடிய சுயாட்சி அடிப்படையில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் ஒன்றுபட்ட சுயாட்சியின் மூலம் அதிகாரங்கள் பகிரப்பட்டு அதற்கு மத்திய அரசு தலையீடு இல்லாமல் முழுமையான பகிரப்பட்ட அதிகாரங்களின் கீழ் வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணத்திற்கு நாங்கள் கோர வேண்டியுள்ளது.

அதேவேளை, இனப்பிரச்சினை தீர்விலும் அன்றாடம் நாங்கள் எதிர்நோக்கியுள்ள நில பிரச்சினை, சிறையில் உள்ள இளை ஞர்கள் பிரச்சினை, காணாமல் போனவர்கள் பிரச்சினை, பெண்களின் பாதுகாப்பு, வாழ்க்கை இழந்துள்ள பெண் தலை மைத்துவ குடும்பங்களின் பிரச்சினைகள் ஆகிய பிரச்சினைகள் தொடர்பில் அரசாங் கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளோம்.

புதிய அரசாங்கம் ஆட்சி அமைத்த பின்னரும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண பேச வேண்டி இருக்கும். முக்கியமாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காண பேச வேண்டி இருக்கும் அந்த அடிப்படையில் எங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்திருக்கும்.

திட்டவட்டமான ஒரு அரசியல் தீர்வு கிட்ட வேண்டி ஒரு அரசியல் கோட்பாடு நாங்கள் ஏற்படுத்தி இருந்தாலும் சர்வதேசத்தின் ஆதரவை மேலும் வலுப்படுத்தி புலம் பெயர்ந்த தமிழர்களின் ஒன்றுபட்ட ஆதரவை பெற்றுக்கொள்ள கூடிய வகையில் எமது தேர்தல் அறிக்கை வரும்.