செய்திகள்

சர்வதேச சமூகத்தின் கௌரவமான உறுப்பினர் என்ற உரிய இடத்திற்கு இலங்கை மீண்டும் திரும்புவதற்கான தருணமிது

பல வருட ஓடுக்குமுறை ஆட்சிக்கு பின்னர் புதிய அரசாங்கத்தை தெரிவுசெய்தமைக்காக இலங்கை மக்களை பாராட்டியுள்ள அமெரிக்கா சர்வதேச சமூகத்தின் கௌரவமான உறுப்பினர் என்ற உரிய இடத்திற்கு இலங்கை மீண்டும் திரும்புவதற்கான தருணமிது எனவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் அன்டனி ஜே. பிலிங்கென் இதனை தெரிவித்துள்ளார்.
வாசிங்டனிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்ற இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் முதல் காலி வரையிலான இலங்கை மக்கள் வாக்குபெட்டி மூலமாக தெளிவான சமிக்ஞையை வெளியிட்டுள்ளனர்.உங்கள் நாடு அதன் திறiமையை முற்றாக பயன்படுத்துவதற்கும், சமாதானத்தின் பலாபலன்களை அனுபவிப்பதற்கும்  ஓரடி முன்னே எடுத்துவைப்பதை விரும்புகின்றனர் என்பதை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருடம் முழு உலகும் இலங்கையின் சுதந்திரத்தை கொண்டாடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி தேர்தலுக்கு பின்னர் இலங்கை மக்கள் தாங்கள் சாதித்தவிடயத்திற்காக முழுiயாக பெருமையடையலாம்,
உங்கள் நாட்டின் வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த தேர்தலிற்கு பின்னர்,ஜனநாயக கனவின் பாதுகாவலர்கள் என்ற வகையில் அமெரிக்கா உங்கள் பக்கமுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகச்சிறந்த நிகழ்ச்சிநிரலொன்றை முன்னெடுக்கிறார்,
அவர் ஊடகங்கள் மீதான கட்டுப்பாட்டை நீக்கியது,அரசகட்டமைப்புகளுக்கு சுதந்திரத்தை வழங்கியது,அனைத்து இலங்கையர்களினதும் மனித உரிமைகளை மதிக்கப்போவதாக உறுதியளித்துள்ளது ஆகியவற்றை உலகம் கவனத்திலெடுத்துள்ளது.
இலங்கையின் சுதந்திரதின நிகழ்வுகளில் தமிழ்கூட்டமைப்பினர் கலந்துகொண்டமை மனதை தொடும் விடயம்.
இலங்கை ஜனாதிபதி யுத்தத்தில் கொல்லப்பட்ட  அனைவரையும் நினைவுகூர்ந்ததும், இலங்கையில் மீண்டும் அவ்வாறான நிலை ஏற்பட அனுமதிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளமையும் முக்கியமானது,
இலங்கை அதனுடன் நின்றுவிடாது என்பதே எனது நம்பிக்கை,இலங்கைக்குள் உள்ள பிரிவினைகளுக்க தீர்வு காண்பதன் மூலம்,வெளியுலகிற்கும் உங்கள் முன்னேற்றத்தையும் நல்லிணக்கத்தையும் பகிர்ந்துகொள்வீர்கள் என கருதுகிறேன். என அவர் குறிப்பிட்டுள்ளார்.