செய்திகள்

சவுதியின் ஆளில்லா விமானம் ஹெளத்திபோராளிகள் வசம்

யேமனில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ள சவுதி அரேபியா தலைமையிலான நாடுகளுக்கு சொந்தமான ஆளில்லா விமானத்தை ஹவுத்திபோராளிகள் அதை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.

ஹவுத்தி படைகளின் நிலவரத்தை உளவு பார்க்க அனுப்பப்பட்ட அந்த ஆளில்லா விமானத்தில் நேற்று திடீரென கோளாறு ஏற்பட்டதால் சதா மாகாணத்தில் அது தரையிறங்கியது. அப்போது அவ்வழியாக ரோந்து வந்த ஹவுத்தி படைகளின் அன்சருல்லா படைப்பிரிவினர் அந்த ஆளில்லா விமானத்தை கைப்பற்றி சென்றுள்ளனர்