செய்திகள்

சவுதி ஈராக் எல்லையில் தற்கொலைதாக்குதல்

ஈராக்குடனான அதன் எல்லையில் இடம்பெற்ற தற்கொலைதாக்குதல் தாக்குதலை தொடர்ந்து சவுதிஅரேபியா தனது பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
அரார் நகரின் எல்லையில் எல்லை பாதுகாப்பு பிரிவினர் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும்,படையினர் மேற்கொண்ட தாக்குதலின் போது இருவர் கொல்லப்பட்டதாகவும், ஏனைய இருவரையும் பிடிப்பதற்காக துரத்தி சென்ற வேளை அவர்கள் தங்களை வெடிக்கவைத்ததில் இரு படையினர் கொல்லப்பட்டதாகவும், அதில் ஒருவர் ஜெனரல் தர அதிகாரி என அறிவிக்கப்பட்டு;ள்ளது.
சவுதிமன்னர் அப்துல்லா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நிச்சயமற்ற நிலை தோன்றியுள்ள நிலையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.