செய்திகள்

சவுதி மசூதியில் நடத்தப்பட்ட இரண்டாவது மனித குண்டு தாக்குதலுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பேற்றது

சவுதிஅரேபிய மசூதியில் நேற்று இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளதுசவுதி அரேபியாவில் உள்ள மசூதியில் நேற்று தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு 4 பேர் பலியாகினர்.

தம்மாம் நகரில் உள்ள அல்-அனவுட் மசூதியில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் ஜும்மா தொழுகை நடைபெற்றது. அப்போது உள்ளே நுழைந்த தற்கொலைப்படை தீவிரவாதியை ஒருவர் தடுத்து நிறுத்த முயன்றார். கண்ணிமைக்கும் நேரத்தில் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை அந்நபர் வெடிக்க வைத்ததில் 4 பேர் பலியாகினர். பத்துக்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்தனர்.

சவுதி அரேபியாவின் அல் கதீ என்ற கிராமத்தில் உள்ள ஷியா பிரிவினரின் மசூதிக்குள் கடந்த வாரம் புகுந்த தற்கொலைப்படை தீவிரவாதிஇ தனது உடலில் கட்டிவந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில்இ 21 பேர் உடல் சிதறி உயிரிழந்தது நினைவிருக்கலாம். இந்த தாக்குதலுக்கு ஏற்கனவே பொறுப்பேற்று கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் நேற்று தம்மாம் நகரில் உள்ள மசூதியில் நடத்தப்பட்ட மனித குண்டு தாக்குதலுக்கும் இன்று பொறுப்பேற்றுள்ளது.