செய்திகள்

சவுதி விமானதாக்குதலில் யேமனில் பல பொதுமக்கள் பலி

யேமனில் சவுதிஅரேபியா தலைமையிலான நாடுகள் மேற்கொண்ட விமானத்தாக்குதலில் பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யேமனின் வடபகுதியிலுள்ள அகதிமுகாம் ஓன்றின் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இடம்பெயர்விற்கான சர்வதேச அமைப்பின் தலைவர் பேச்சாளர் இந்த தாக்குதலின் போது 40 பேர்வரை கொல்லப்பட்டுள்ளதுடன் 200 போ வரை காயடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
யேமனின் வடபகுதியிலுள்ள அல் மஸ்ராக்அகதிமுகாம் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ஹெளத்திபோராளிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட் அகதிமுகாம் மக்கள் மிக மோசமான நிலையில் வாழ்ந்துவந்தனர், தற்போது அவர்கள் குண்டுவீச்சால் பாதிக்கப்பட்டுள்ளனர் என எல்லைகளற்ற மருத்துவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
எனினும் சவுதி அதிகாரிகள் அந்த முகாமின் மீது எந்த தாக்குதலும் நடைபெறவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
ஈரானிய ஆதரவு ஹெளத்தி போராளிகளின் வெற்றிகரமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு கடந்த வாரம் சவுதிஅரேபியா தலைமையிலான நாடுகள் விமானத்தாக்குதல்களை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிராந்தியத்தி;ல் ஈரானின் செல்வாக்கு அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காகவே சவுதிதலைமையிலான 10 நாடுகள் இந்த தாக்குதலை ஆரம்பித்துள்ளன.
இதன் காரணமாக பொதுமக்கள் மத்தியில் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என மனிதாபிமான அமைப்புகள் எச்சரித்துள்ளன.