செய்திகள்

சஷி வீரவன்சவின் கடவுச்சீட்டும் அடையாள அட்டையும் போலியானவை குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவிப்பு

விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவன்சவின் கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை என்பன போலியாக தயாரிக்கப்பட்டவை என குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் இன்று நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்களால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மூலம் இந்த விடயம் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதான  நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அந்த அறிக்கையை சட்ட மாஅதிபருக்கு அனுப்பவுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.
இந்த விடயங்களை பரிசீலித்த கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டியஇ வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்துள்ளார்.