செய்திகள்

சஷி வீரவன்ச விவகாரத்தை தாமதப்படுத்திய பொலிஸ் அதிகாரி இடமர்ற்றம்

சேிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச தொடர்பிலான விசாரணைகளின் போது மெத்தனப் போக்கைப் பின்பற்றிய குற்றப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார்.

அரசாங்கம் அண்மையில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். சஷி வீரவன்சவின் விவகாரத்தை துரிதமாகக் கையாள்வதற்கு அவர் தவறியமைதான் இந்த அவசர இடமாற்றத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சஷி வீரவன்ச தொடர்பிலான விசாரணைகளை கால தாமதப்படுத்தியமை, கைது செய்ய நடவடிக்கை எடுக்காமை போன்ற காரணிகளே இவ்வாறு திடீரென குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு புதிய பணிப்பாளர் நியமிக்கப்பட்டமைக்கான காரணம் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

போலி ராஜதந்திர கடவுச்சீட்டு பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் சசீ வீரவன்ச கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். முன்னாள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், முன்கூட்டியே சசீயை கைது செய்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

குற்றப் புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக பி.ஆர்.எஸ்.ஆர். நாகஹாமுல்ல தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்தையடுத்தே சஷி வீரவன்ச கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.