செய்திகள்

சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டம் இலங்கையில்

வழக்கு விசாரணையின்போது சாட்சியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளும் சட்டமூலமொன்றை வெகுவிரைவில் பாராளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சியங்கள் இருந்தாலும் அவற்றினால் பலனில்லாமல் போகிறது. சாட்சியங்கள் பயப்படுகின்றன. இந்நிலை மாற்றப்பட்டு சுயாதீனமாகவும், சுதந்திரமாகவும் சாட்சியமளிக்க சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டமூலத்தை கொண்டுவருவேன் என்றார்.

இதனை பாதுக்க பிரதேச மக்கள் சந்திப்பில் நீதியமைச்சர் உறுதி தெரிவித்துள்ளார்.