செய்திகள்

சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிக்கு பதிலாக மாற்று தொடர்

எட்டு அணிகள் பங்குபெறும் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடருக்குப் பதிலாக மாற்று தொடரை நடத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக ஐ.பி.எல். தலைவர் சுக்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுக்லா மேலும் தெரிவிக்கையிர் ரசிகர்களின் வருகை குறைவு மற்றும் அனுசரனையாளர்கள் முன்வராதது போன்ற காரணங்களால் ஏப்ரல் மாதம் ஆட்சி குழு கூட்டத்தில் இதுபற்றி ஆலோசனை நடத்தப்படும். சாம்பியன்ஸ் லீக் தொடரை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக வேறு தொடரை நடத்துவது பற்றி பரிசீலனை செய்து வருகிறோம். நானும்’ இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை . செயலாளர் அனுராக் தாகூர் இதுகுறித்து சாத்தியமான விருப்பத்தேர்வுகளை மதிப்பிட்டு வருகிறோம். இவை அனைத்தும் திட்ட நிலையில்தான் உள்ளது.

இதுகுறித்து பலவிதமான யோசனைகள் வருகிறது. கவுரவ செயலாளர்களும் நானும் அவற்றை பரிசீலித்து வருகிறோம். ஐ.பி.எல். போடடியை முடிந்த பிறகு இந்த புதிய திட்டம் குறித்து ஆலோசனை நடத்தி முடிவு செய்வோம்’’ என்றார்.