செய்திகள்

சாவகச்சேரியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற தவறிய திருமண மண்டபத்திற்கு சீல்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி டச் வீதியில் அமைந்துள்ள திருமண மண்டபம் சீல் வைக்கப்பட்டுள்ளது.மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வின் போது சமூக இடைவெளி பின்பற்றப்படாமை, முகக்கவசம் அணியாமை மற்றும் அனுமதியளிக்கப்பட்ட விருந்தினர்கள் எண்ணிக்கையை விட பன்மடங்கு அதிகளவான விருந்தினர்கள் மண்டபத்திற்கு சமுகமளித்தமை ஆகிய காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற தவறிய காரணத்தால் குறித்த திருமண மண்டபம் நேற்று சாவகச்சேரி சுகாதாரப் பிரிவினரால் மறு அறிவித்தல் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.(15)