செய்திகள்

சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகிய நிலையில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன் கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.அவரது இசட் புள்ளி 2.9422 ஆகும். அவர் தேசிய நிலையிலும் யாழ்ப்பாணம் மாவட்ட நிலையிலும் முதலிடம் பெற்று வரலாற்றுப் பதிவு செய்துள்ளார்சரசாலையை பிறப்பிடமாக கொண்ட சுந்தர்பவன் ஒலிம்பியாட் போட்டிகளிலும் சாதனை படைத்து வெளிநாட்டு புலமைப் பரிசில் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது..(15)