செய்திகள்

சிங்கப்பூரின் ஸ்தாபக தந்தை லீ குவான் ஜியூ அவசர சிகிற்சை பிரிவில்

சிங்கப்பூரின் ஸ்தாபக தந்தையும் அந்தநாட்டின் முதல் பிரதமருமான லீ குவான் ஜியூ பெரிதும் நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில் சிங்கப்பூர் வைத்தியசாலையின் அவசர சிகிற்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி நிமோனியாவினால் பாதிக்கப்பபட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்தும் அவரது உடல்நலம் மோசமடைந்ததை அடுத்து செயற்கை சுவாச இயந்திரத்தின் உதவியுடனேயே வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் இன்று உயிர் இழந்து விட்டதாக சிங்கப்பூர் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டதை அடுத்து உலகம் முழுவதும் அந்த செய்தி வேகமாக பரவியது. ஆனால், இந்த செய்தி வெறும் வதந்தியே என்றும் தொடர்ந்தும் லீ குவான் ஜியூ அவசர சிகிற்சை பிரிவில் இருப்பதாகவும் சிங்கபூர் அரசாங்கம் அறிவித்திருகிறது.

1923 ஆம் ஆண்டு பிறந்த லீ குவான் ஜியூவுக்கு தற்போது 91 வயது. 1965 ஆம் ஆண்டு மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றபோது அதனை ஒரு நவீன தேசமாக ஸ்தாபித்து அதன் முதல் பிரமரனார் லீ குவான் ஜியூ. பின்னர் தொடர்ந்து மூன்று தசாப்த காலம் பிரதமராக பதவி வகித்த அவர், மிகச் சிறந்த முறையில் முழு உலகமும் ஆச்சரியம் அடையும் வகையில் சிங்கப்பூரை ஒரு செழிப்பு மிக்க நாடக கட்டி எழுப்பினார்.

நவம்பர் 12 ஆம் நாள் 1954 ஆம் திகதி மக்கள் செயல் கட்சியை நிறுவியா அவர், 1959 முதல் 1990 வரை இந்தக் கட்சியை 7 முறை வெற்றிபெற வைத்தவர். சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமரான லீ ஹசீன் லூங், இவரின் மகன் ஆவார்.