செய்திகள்

சிராந்தி ராஜபக்‌ஷவை நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு வருமாறு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மமஹிந்த ராஜபக்‌ஷவின் பாரியாரான சிராந்தி ராஜபக்‌ஷவுக்கு பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி எதிர்வரும் 1ம் திகதி விசாரணையொன்றுக்காக அவரை அங்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான அழைப்பு கடிதம் தங்காலையிலுள்ள அவரின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தங்களின் குடும்பத்தை பழிவாங்கும் செயற்பாட்டிலேயே அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் இதன் ஒரு அங்கமாகவே தனது தாய் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்‌ஷ எம்.பி தனது ருவிற்றர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.