செய்திகள்

சிராந்தி ராஜ பக்சவுக்கு எதிராக இதுவரை முறைப்பாடுகள் இல்லை

சிரிலியசவிய என்ற தனியார் நிறுவனம் ஒன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்ச நடத்திவந்துள்ளார்.

இந்த நிறுவனம் போலியான அடையாள அட்டைகளை வழங்கியதாகவும், வங்கி கணக்கில் 222222222V என்ற போலியான அடையாள அட்டை இலக்கம் வழங்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்து விசாரணைகள் நடந்தன.

விசாரணைகள் நடந்து கொண்டிருந்தாலும் சிராந்தி ராஜபக்சவுக்கு எதிராக இதுவரை முறைபாடுகள் எதுவும் கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.