செய்திகள்

சிரிகொத்தவையும் முற்றுகையிடுவோம்

எதிர்வரும் தேர்தலில் குற்றவாளிகளுக்கு போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் ஐதேகவின் தலைமையகமான சிரிகொத்தவையும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையக த்தையும் முற்றுகையிடுவோமென ஜனநாயகத்துக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் அமைச்சர் ராஜித  சேனாரத்ன வின் மகனுமான சத்துர சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்துக்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் பண்டாரநாயக மாநாட்டு மண்டபத்தில் நடந்த மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.