செய்திகள்

சிரியாவில் அமெரிக்க சிறப்புப்படை நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். ஐ. எஸ் அமைப்பின் முக்கிய தளபதி பலி

சிரியாவில் அமெரிக்க சிறப்பு படைகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் ஐ. எஸ். ஐ. எஸ் பயங்கரவாத அமைப்பின் மிக முக்கிய தளபதிகளில் ஒருவரான அபு சயாப் என்பவரை கொன்றிருபப்துடன் ஆட்கடத்தல் வலையமைப்பு ஒன்றை நடத்திவந்த அவரது மனைவியை உயிருடன் பிடித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அங்கீகாரத்துடன் சிரியாவின் கிழக்கு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது கூட்டுப்படைகளின் யுத்த விமானங்கள் ஐ. எஸ்.ஐ. எஸ் வசம் இருந்த பகுதியில் தாக்குதல் நடத்திய அதேசமயம், ஐ. எஸ். ஐ. எஸ் பயங்கரவாதிகளின் முக்கிய உறுப்பினர்களை உயிருடன் பிடிக்கும் நோக்குடன் பரா துருப்புக்கள் விமானம் மூலம் தரை இறங்கியதாகவும் பெண்டகன் அறிவித்துள்ளது.

அபு சயாபின் மனைவி வட ஈராக்கில் வாழுகின்ற புராதன மேசொபத்தேமிய மதங்களுடன் தொடர்புடைய
யாசிடிஸிம் என்ற மதத்தை சேர்ந்த யாசிடிஸ் இன இளம் பெண்களை கடத்தி ஐ. எஸ். ஐ. எஸ் பயங்கரவாதிகளுக்கு பாலியல் அடிமைகளாக கொண்டு சேர்க்கும் ஒரு பெரும் வலையமைப்பை நடத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் நடத்தப்பட்டபோது இவர்கள் வசம் இருந்த ஒரு இளம் யாசிடிஸ் பெண் மீட்கப்பட்டதாகவும் பெண்டகன் தெரிவித்துள்ளது.