செய்திகள்

சிரியா உள்நாட்டுப் போரில் பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரமாக உயர்ந்தது

சிரியாவில் கடந்த நான்காண்டுகளாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை சுமார் 11 ஆயிரத்து 500 குழந்தைகள் உள்பட 2.3 லட்சம் பேர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த மனித உரிமை கண்காணிப்பு ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த நான்காண்டுகளில் மட்டும் 11 ஆயிரத்து 493 குழந்தைகள், 7 ஆயிரத்து 371 பெண்கள் உள்பட பொதுமக்களில் 69 ஆயிரத்து 494 பேரும், அரசு ராணுவத்தை சேர்ந்த 49 ஆயிரத்து 106 வீரர்களும், அரசுக்கு ஆதரவான படையை சேர்ந்த 36 ஆயிரத்து 464 பேரும் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சிரியா நாட்டின் ஜிஹாதிகள் மற்றும் குர்திஷ் இனத்தை சேர்ந்த புரட்சிப்படையின் சார்பில் 41 ஆயிரத்து 116 பேரும், சிரியா அரசை எதிர்த்து இங்கு போராடிவரும் வெளிநாடுகளை சேர்ந்த ஜிஹாத் படையை சேர்ந்த 31 ஆயிரத்து 247 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களை தவிர அடையாளம் காணமுடியாத அளவுக்கு 3 ஆயிரத்து 191 பேர் உடல் சிதறி பலியாகியுள்ளனர்.

இந்த உள்நாட்டு போர் வரலாற்றில் கடந்த மே மாதம் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்ட மாதமாக கருதப்படுகின்றது. இந்த ஒரே மாதத்தில் மட்டும் 6 ஆயிரத்து 657 பேர் பலியாகியுள்ளனர் என்பது, குறிப்பிடத்தக்கது.