செய்திகள்

சிரிய அரச விமானதாக்குதல்களில் 50 பேர் பலி

சிரிய அரசபடையினர் திங்கட்கிழமை மேற்கொண்ட விமானதாக்குதல்களில் ஆறு குழந்தைகள் உட்பட 49 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அல் ஜனுடியா என்ற கிராமத்தின் மீது அரச விமானங்கள் மேற்கொண்ட தாக்குதல்களின் போதே பொதுமக்கள் கொல்லப்பட்டதாக லண்டனை தளமாக கொண்ட மனித உரிமை அமைப்பொன்று தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் பொருள் கொள்வனவிற்காக கூடியிருந்த பகுதி மீதே இந்த விமானதாக்குதல் இடம்பெற்றது,காயமடைந்த பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனவும் குறிப்பிட்ட மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
கிளர்ச்சிக்காரர்களின் பிடியில் உள்ள வேறு பகுதிகள் மீதும் அரசவிமானங்கள் மேற்கொண்ட தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாகவும்,அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.