செய்திகள்

சிறிபாலவின் கதையை கேட்காது உடனடியாக பாராளுமன்றத்தை கலையுங்கள் : ஜனாதிபதிக்கு ஜே.வி.பி கோரிக்கை

பாராளுமன்றத்தை உடனடியாக கலைத்துப் பொதுத் தேர்தலை நடத்துமாறு  ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று கிருளப்பனை பீ.ஆர்.சி மைதானத்தில் நடைபெற்ற ஜே.பி.யின் மே தின கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தினால் எந்த அபிவிருத்திகளையும் மேற்கொள்ள முடியாது. அத்துடன் கடந்த கால ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கவும் முடியாது இதனால் இவ்வாறு தொடர்ந்தும் தற்போதைய பாராளுமன்றத்தை கொண்டு செல்ல முடியாது.
மக்கள் ஆணையின்றியே பிரதமர் ஆசனத்தில் ரணில் அமர்ந்திருக்கின்றார். இதனால் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கையெடுக்க வேண்டும. தன்னை தோற்கடிக்க முயற்சித்த சிறிபாலவின் கூறுவதை கேட்காது  தன்னை வெற்றிப்பெற செய்த மக்களின் கருத்துக்களுக்கு காது கொடுத்து பாராளுமன்றத்தை கலைக்கமாறு ஜனாதிபதியை கேட்டுக்கொள்கின்றோம் . என தெரிவித்துள்ளார்.