செய்திகள்

சிறிய கட்சிகளை முற்றாக வெளியேற்றுவது நோக்கமா? அநுர குமார கேள்வி

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவை தனக்கு சார்பாக சீர்செய்யும் நோக்கிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் மறுசீரமைப்பை முன்வைத்திருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் குற்றஞ் சாட்டினார்.

தேர்தல்முறை மாற்றத்தை உள்ளடக்கிய 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டிருக்கும் பிளவைத் தடுத்து தமது தரப்பை பலப்படுத்தும் வகையில் இத்தேர்தல் திருத்தம் முன்வைக்கப்ப ட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டிருக்கும் தேர்தல்முறை மாற்றத்தில் பல்வேறு தொழில்நுட்ப குறைபாடுகள் காணப்படுவதாகச் சுட்டிக் காட்டிய அவர், சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளைப் பாராளுமன்றத்திலிருந்து முழுமையாக வெளியேற்றும் நோக்கில் இது தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.