செய்திகள்

சிறுநீரை அருந்தி உயிர்வாழ்கிறோம்-நடுக்கடலில் சிக்குண்ட மியன்மார் குடியேற்றவாசிகள்

 

அந்தமான் கடற்பரப்பில் கடந்த ஓருவாரகாலமாக நகர அனுமதியின்றி சிக்குண்டிருந்த படகில் உள்ள மியன்மார் குடியேற்றவாசிகள் தங்களில் 10 பேர் இறந்துவிட்டதாகவும், தாங்கள் சிறுநீரை அருந்தி உயிர்தப்பிவருவதாகவும் தெரிவித்துள்ளர்தாய்லாந்திற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அந்தமான் கடற்பரப்பில் சிக்குண்டிருந்த குறிப்பிட்ட மீன்பிடி படகில் 350 மியன்மார் ரொகிங்யா முஸ்லீம் சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

migrants boat
தங்கள் படகை செலுத்தி வந்தவர்கள் படகின் இயந்திரங்களை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டதாகவும், இறந்த 10 பேரையும் தாங்கள் கடலில் தூக்கிவீசியதாகவும் அந்த படகில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட படகில் உள்ளவர்களுடன் உரையாடிய பிபிசி செய்தியாளர் அந்த படகில் மிகவும் பரிதாபகரமான நிலை காணப்படுவதாகவும்,தண்ணீர் மற்றும் உணவிற்காக அவர்கள் தன்னிடம் மன்றாடியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த படகில் பல பெண்களும், குழந்தைகளும் உள்ளனர்,குறிப்பிட்ட பழைய மீன்பிடி படகு முழுவதும் ஆட்கள் உள்ளனர்.
அவர்கள் தங்கள் சிறுநீரை குடிப்பதை நாங்கள் பார்க்கின்றோம்,நாங்கள் தண்ணீர் போத்தல்களை அவர்களின் படகிற்குள் எறிந்துள்ளோம், என அவர் தெரிவித்துள்ளார்.

migranys 4
80 மற்றும் 54 குழந்தைகள் அடங்கிய மியன்மார் குடியேற்றவாசிகள் தாங்கள் கட்நத மூன்று மாதகாலமாக கடற்பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட படகை தாய்லாந்து மீனவர்கள் புதன்கிழமை கண்டுள்ளனர் பின்னர் அவர்கள் அதனை மலேசிய கடற்பரப்பிற்கு கொண்டுவந்துள்ளனர்,பின்னர் அந்த படகை மீண்டும் தாய்லாந்து கடற்பகுதிக்கு கொண்டுசென்றுள்ளனர்.அவர்கள் மலேசியாவை சென்றடைவதையே நோக்கமாக கொண்டுள்ளனர் அவர்களுக்கு உணவு போன்றவற்றை வழங்கிய பின்னர் மீண்டும் செல்வதற்கு அனுமதிப்போம் என தாய்லாந்து அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா ஆகிய மூன்று நாடுகளும் படகுகளில் வரும் குடியேற்றவாசிகளுக்கு அனுமதி மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.இந்த நாடுகளிற்கு இடைப்பட் கடற்பரப்பில் ஆயிரக்கணக்கான குடியேற்றவாசிகள் படகுகளில் சிக்குண்டுள்ளனர்.
மியன்மாரில் துன்புறுத்தலிற்கு உள்ளாகும் ரொகிங்யா இனத்தவர்களின் உயிர்களுடன் இந்த மூன்று நாடுகளும் விளையாடுவதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.