செய்திகள்

சிறுவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான வயதெல்லையை நீடிக்க தீர்மானம்

சிறுவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான வயதெல்லையை எட்டு வயதில் இருந்து 12 வயது வரை உயர்த்துவதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளதாகவும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சட்டத்திற்கு அமைய புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அதிகார சபையின் தலைவர் நட்டாஷா பாலேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய எதிர்காலத்தில் எந்தவொரு சட்ட நடவடிக்கைக்காகவும் 12 வயதிற்கு குறைந்த சிறுவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

12 வயதுக்கு குறைந்த சிறுவர்களால் இழைக்கப்படுகின்ற தவறுகளை திட்டமிடப்பட்ட குற்றங்களாக கருத முடியாது என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. தவறிழைக்கும் சிறுவர்களை புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைப்பதே மிகவும் உகந்தது என அதிகார சபையின் தலைவர் மேலும் கூறியுள்ளார்.