செய்திகள்

சிவநடனமும் யோக மார்க்கமும்- ஆத்மாவும் பிரபஞ்சமும் பற்றிய இன்றைய புரிதல்

மருத்துவர் சி. யமுனாநந்தா

ஒரு பொருள் பல்வேறு நிலைகளுக்குச் செல்லுதலும் மீண்டும் அதே நிலைக்கு வருதலும் இயற்கையில் நிகழும் செயற்பாடாகும். இது மீநுண்துகள் நிலையில் இருந்து பரும்பொருள் வரை நிகழ்கின்றது. இன்று விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களில் மிகவும் சிறிய அணுத்துகழ்கள் துவித நிலையில் அதாவது இரண்டு வேறுபட்ட நிலைகளில் இருந்து பௌதீகத் தன்மையை அளிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. சிறிய திணிவுகளின் துவித நிலைகள், அதிர்வுகள் எனவும் அழைக்கப்படலாம். சக்தித் துணிக்கைகளும் இவ்வாறே பிரபஞ்சத்தில் அதிர்வுகளால் கடத்தப்படுகின்றன. இவை அலைகள் என அழைக்கப்படுகின்றன. மனிதனின் அசைவுகளும் தொடர்பாடல்களும் நடனம் மூலம் வெளிப்படுத்தப்-படுகின்றன.

அண்மைய விஞ்ஞான ஆராய்சிகளில் நரம்புக்கலங்களினூடாக கணத்தாக்கம் கடத்தப்படலின் ஈர்ப்பு அலைகளின் தாக்கம் செல்வாக்குச் செலுத்துகின்றது என்பது மிகவும் திருப்புமுனையான கண்டுபிடிப்பாக அமைந்துள்ளது. இது மருத்துவ விஞ்ஞானத்தில் பல தொழில்நுட்பப் புரட்சியினை ஏற்படுத்தவுள்ளது. குறிப்பாக புதியவகை ஊடுகதிர் சோதனைகள், ஊடுகதிர் சிகிச்சைகள் ஈர்ப்பு அலைகளின் தொழில்நுட்பம் மூலம் பரிணமிக்கலாம்.

மூளை முன்ணாண் பகுதிகளின் ஈர்ப்பு அலைகளின் தாக்கம் மருத்துவ சிகிச்சையில் புதிய அணுகுமுறைகளையும், சாதாரண வாழ்வில் மனிதனது திணிவுசார்பான ஓய்வுநிலை இருக்கைகள் தொடர்பாகவும் மாற்றத்தினை ஏற்படுத்தும்.

தமிழர்களின் பாரம்பரிய உடல் உள சமூக ஆன்மிக மேம்பாட்டிற்கான யோக வழிமுறைகளில் இயற்கையான ஈர்ப்;பு விசைகள் பல்வேறு திசைகளில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. யோகாநிலையின்போது 126 ஆசனங்களில் அதாவது உடலை வௌ;வேறு புவியீர்ப்பு மையத்தில் வைத்து உயிர்க்காற்றைக் கட்டுப்படுத்துகின்றனர். அவ்வாறே பிரபஞ்ச இயக்கத்தையும், ஆன்மாவின் இயக்கத்தையும் கூறும் நாதன் நடம் 64 வகையாக உள்ளது. இது 64 வகையான ஈர்ப்பு நிலைகளைக் கூறுகின்றது. (82) இதனைத் தற்போதைய விஞ்ஞானிகள் நு8 மாதிரியாக வடிவமைத்து உள்ளனர்.

பிரபஞ்சமும் மனிதமூளையும் ஒரே விதமான செயல்நிலைக் கட்டமைப்பைக் கொண்டுள்ளதாக அண்மை விஞ்ஞான எதிர்வு கூறல்கள் கூறுகின்;றன. திருமந்திரப் பாடலில் இது தொடர்பான கருத்துக்கள் உள்ளன.

ஊனாய் உயிராய் உணர் அங்கியாய் முன்னம்
தேனாய் வான் ஓங்கித் திருஉருவாய் அண்டத்
தாணுவம் ஞாயிறும் தண் மதியுங் கடந்து
ஆன் முழுது அண்டமும் ஆகி நின்றாளே.
(திருமந்திரம் 374)

சைவசித்தாந்தத்தில் சிவ நடனம் மிகப்பெரிய தத்துவத்தைக் கூறுகின்றது. தூல நடனம், சூக்;கும நடனம் என உயிரியில் இருந்து அகிலம் வரையான பிரபஞ்ச அதிர்வுகளை உணர்த்துகின்றது. சிவநடனத்தில் 64 நிலைகளும் சிவநடனத்தின் வௌ;வேறு ஈர்ப்பு புல நிலைகளைக் காட்டுகின்றது. அதாவது 25 ஈர்ப்புவிசையின் துவித நிலைகளின் செயற்பாடு பிரபஞ்சத்தில் உள்ளதை சிவநடனம் எடுத்துக் காட்டுகின்றது.

சைவசித்தாந்தத்தில் மெய்யறிவைப்பெற யோகமார்க்கத்தில் பல்வேறு யோகநிலைகள் உள்ளன. இந்த யோகநிலைகள் பிரபஞ்சத்துடன் வௌ;வேறு ஈர்ப்பு நிலைகளுடன் தொடர்பில் அமையும். உயிர்க்;காற்;றானது மனித உடலில் ஐந்து சக்கர நிலைகளில் மேலும் கீழுமாக இயங்கிக்கொண்டு உள்ளது. பிரபஞ்;ச மெய்யுணர்வை யோகநிலையில் 126 ஆசனங்களில் பெறலாம்.புருவ நடவில் மூச்சுக் காற்று
கடைவாசலைக் கட்டிக் காலை எழுப்பி
இடை வாசல் நோக்கி இனிதுள் இருத்தி
மடைவாயில் கொக்;குப்போல் வந்தித்திருப்பார்
உடையாமல் ஊழி இருக்கலும் ஆமே. (திருமந்திரம் – 591)

குண்டலினி சக்தியினை கட்டுப்படுத்தி ஊழிக்காலம் வரை ஆத்மா இருக்கும் நிலை கூறப்பட்டுள்ளது.

சுவத்திக ஆசனம்
பங்கயம் ஆதி பரந்த பல் ஆதனம்
அங்குளவாம் இரு நாலும் அவற்றினுள்
சொங்கில்லை யாகச் சுவத்திகம் எனமிகத்
தங்க இருப்பத் தலைவனும் ஆமே. (திருமந்திரம் – 558)

உடம்பு சோர்வு இல்லாது இருக்கும் ஆசனம் முழந்தாளுக்கும் தொடைக்கும் நடுவே இரண்டு பாதங்களையும் வைத்துக் கொண்டு நிமிர்ந்து உட்காரும் நிலை இது சுகாசனம் எனவும் கூறப்படும்.

பத்மாசனம்
ஓரணை அப்பதம் ஊருவின் மேல் ஏறிட்டு
அர வலித்த தன்மேல் வைத்தழகுறச்
சீர் திகழ் கைகள் அதனைத் தன்மேல் வைக்;கப்
பார் திகழ் பத்மாசனம் எனல் ஆடுமே. (திருமந்திரம் – 559)

ஒருபக்கம் அணைந்த காலை மடித்துத் தொடையின் மேலே வைத்து நன்றாக இழுத்து மற்றைய காலை அதன்மேல் வைத்து அதாவது வலது பக்கத் தொடையின்மேல் இடது காலையும் இடதுபக்கத் தொடையின்;மீது வலது காலையும் மடித்து வைத்து கைகள் இரண்டையும் மடித்த கால்களின் முட்டிகள் மேல் வைத்தபடி நிமிர்ந்து நேராக உட்காந்து இருப்பது பத்மாசனமாகும்.

பத்திராசனம்.
துரிசில் வலக்காலைத் தோன்றவே மேல்வைத்து
அரிய முழந்தாளில் அங்கைகளை நீட்டி
உருகியிடும் உடல் செவ் வே இருத்தில்
பரிசு பெறுவது பத்திராசனமே. (திருமந்திரம் – 560)

முழங்கால்கள் மேல் கைகளை நீட்டி தளர்ந்த உடலை நேராக நிமிர்த்திச் சரியாக நிமிர்ந்த நிலையில் உயிருக்கும் உடலுக்கும் சுகம் தருவது பத்திராசனமாகும்.

குக்குடாசனம்
உடம்பின் பளுவை முழங்கை தாங்குமாறு அசைவின்றிய கோழியிருக்கை.

ஒக்க அடியினை ஊருவில் ஏறிட்டு
முக்கி உடலை முழங்கை தனில் ஏற்றித்
தொக்க அறிந்து துளங்கா திருந்திடில்
குக்குடாசனம் கொள்ளலும் ஆமே. (திருமந்திரம் – 561)

இரண்டு பாதங்களையும் ஒரே மாதிரித் தொடையின்மேல் இருத்தி முக்கி உடம்பை முழங்கைமேல் தூக்கி நிறுத்தி உடம்பின் பாரம் கைகளில் தாங்குவதைச் சரியாக உணர்ந்து சமநிலையில், அசையாது இருப்பது குக்குட ஆசனத்தில் கொள்ள வேண்டிய நிலையாகும். இவ்வாசன நிலை கோழியின் நிலை போன்றமையின் குக்குட ஆசனம் என்றாயிற்று.

சிம்மாசனம்
பாதம் முழந்தாளில் பாணிகளை நீட்டி
ஆதரவோடும் வாய் அங்காற் அழகுறக்
கோதில் நயனம் கொடுமூக்கிலே உறச்
சீர்திகழ் சிங்காதன மெனச் செப்புமே. (562)

இரண்டு கால் பாதங்களை முழங்கால் மேல்வைத்து அதன்மேல் கைகளை நீட்டி அன்பாக வாயைத்திறந்து கண்களை புருவ மத்தியின் துனியில் நிலைக்கச் செய்வது சிம்மாசனம் ஆகும்.
யோகாசனத்தில் 126 ஆசனங்கள் உண்டு

பத்திரம் கோமுகம் பங்கயம் சேகரி
சொத்திரம் வீரம் சுகாதனம் ஓர் ஏழும்
உத்தமமாம் முது ஆசனம் எட்டெட்டும்
பத்தொடு நூறு பல ஆசனமே. (திருமந்திரம் – 563)

பத்திராசனம், கோமுகாசனம், பத்மாசனம், சிம்மாசனம், சொத்திராசனம், வீராசனம், சுகாசனம், எனும் ஏழு ஆசனங்களுடன் முது ஆசனம் சேர்த்து எட்டு ஆசனங்களும் சேர்த்து எட்டெட்டாகப் பதினாறும் பத்தும் நூறுமாக நூற்று இருபத்தாறு ஆசனங்கள் மூச்சுப் பயிற்சியில் கைக்கொள்ளப்படுகின்றது.

இவ்வாறு பல்வேறுபட்ட உடல்நிலைகள் மூச்சுப்பயிற்சியில் உயிர்க்காற்றின் இயக்கத்தினை வௌ;வேறு ஈர்ப்புப்புல விசைகளின் தாக்கத்திற்கு இட்டுச் செல்லும். எமது தொன்மையான யோகக்கலையானது இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளினூடே மேலும் பெருமையடைவதனை அண்மைய ஈர்ப்புல விசைகளின் தாக்கம் நரம்புக் கணத்தாக்கங்களில் செல்வாக்குச் செலுத்தும் அவதானங்கள் மூலம் காணக்கூடியதாக உள்ளது.