செய்திகள்

சிவனொளிபாதமலைக்கு சென்ற சிங்கப்பூர் பிரஜை தீடிர் மரணம்

சிவனொளிபாத மலைக்கு வழிபாடுக்கு சென்ற சிங்கப்பூா் பிரஜை ஒருவர் நேற்று திங்கட்கிழமை இரவு திடீரென மரணமடைந்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.

55 வயதுடைய டொன் ஏன் என்ற நபரே இவ்வாறு மரணமடைந்திருப்பதாகவும், தற்போது அவருடைய சடலம் பிரேத பரிசோதனைக்காக மஸ்கெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அணில் ஜயசிங்க தெரிவித்தார்.

சிங்கப்பபூர் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் சிவனொலிபாத மலைக்கு நேற்றைய தினம் மாலை 6 மணியளவில் விஜயம் செய்திருந்த நிலையில் இந்திகட்டுப்பான என்ற இடத்தில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபா் மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனா்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.