செய்திகள்

சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கு கஞ்சா விற்றவர் கைது

சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்குக் கஞ்சா விற்ற குருநகர்ப் பகுதியினைச் சேர்ந்த 31 வயது ஆசாமியை நேற்று முன்தினமிரவு யாழ்.குற்றத்தடுப்புப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்புத்துறைப் பகுதிக்குச் சிவிலுடையில் சென்ற பொலிஸாருக்குச் சந்தேகநபர் கஞ்சாவை விற்பனை செய்வதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேகநபரின் உடமையிலிருந்து 20 கிராம் நிறையுடைய மூன்று கட்டுக் கஞ்சாவினை பொலிஸார் இதன் போது மீட்டுள்ளனர்.

மேலும் கஞ்சா வியாபாரம் மூலம் பெற்றுக் கொண்ட 3000 ரூபா பணத்தினையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

சந்தேகநபரும், சான்றுப் பொருட்களும் நேற்று யாழ்.நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டது.